top of page
Search
  • Writer's pictureShreya Nagarajan Singh

Art As A Vehicle for Social Change - Essay Competition: Winners - Gayatri Nair (English) and N Kavishani (Tamil)

As a part of the 9th edition of DakshinaChitra's Utsavam, for the first time an essay competition was hosted. It was open to all age groups and gender on the topic of Art as a vehicle for social change. From the entires 6 participants were shortlisted to present on March 10th 2024 at the Utsavam festival at DakshinaChitra. 4 English essays and 2 Tamil essays were shortlisted.

The finalists presented their essays in front of the jury members Dr. S. Sowmya (Carnatic Vocalist and Vice Chancellor - Tamil Nadu Music and Fine Arts University) & Dr. Adam Greig ( Pianist and Director - KM Music Conservatory) and Mr. S. Pralayan (Chennai-based playwright-activist). Utsavam was curated and produced for DakshinaChitra Heritage Museum by SNS Arts Development Consultancy for the 7th year in a row. Winners received a cash prize of Rs. 10,000 each.


 

Art As A Vehicle for Social Change

by Gayatri Nair


I remember participating in painting competitions on Earth Day. Even though this was over 30 years ago, I still remember what I painted - Earth split in half. One half of the earth was just hues of brown and gray. It was treeless and covered in smoke, ash and fumes coming from icons of industrialization like factories. It also depicted war through tanks & exploding bombs (I think I might have inserted a Saddam Hussein look-alike in there too).

The other half was green, had a blue lake, colorful butterflies and I think a deer and some birds. The darker side had humans on it, and the other had none. I think you can visualize this very easily because it was (and continues to be) a very common trope in art; to show “contrast”.

The reason I am starting with this is to display my innocence as an amateur artist. Without commenting on the quality of my painting skills, the idea that I could use a painting to depict the very complex idea of environmentalism ; to think that my painting would change someone’s mind; to think that without political reform and collective action, just presenting my art was enough, was so naïve.

This is where I wanted to start my essay. That while art is and can be an important vehicle for change; it has to work together with many other parts of our society.

First, we must recognize that art is a form of expression and not action. It could very well lead to action but for that to happen, the artist & their allied communities must feel enabled and empowered. This can happen through access to education (not just art education but also through improved infrastructure and equity in education as a whole), access to resources (funding) and access to platforms (spaces for art to be expressed openly and freely).

Secondly, art which is meant for social change must steer clear of commodification and appropriation. Most societies today have adopted capitalist modes of operation and art, like all other aspects of human existence, has also succumbed to capitalism. Art is now being weaponized by the rich and the powerful to white-wash or green-wash their atrocities committed on marginalized communities. We can see this across literature fests, theater fests and biennales and film festivals. Often, the sponsors of these events are the ones that artists intend to speak up against and sadly, are discouraged to do so by the organizers for

the fear of losing sponsorships. This is a vicious cycle and is one plaguing all artists and art institutions.

Lastly, socially-aware art can also become a form of distraction or a catharsis. What I mean is we can feel that by just consuming or buying socially-aware art, we can absolve ourselves of actually working towards social change. For example, listening to a queer artist at a spoken word event or attending a Dalit artist’s exhibition. While these activities are small steps to bringing awareness to issues, they don’t make any structural changes in our society. This is where we need to draw a line. Socially-aware art is important but without collective action, and political reform, it is mere lip service.

Having said all this, I firmly believe that art is one of the best ways of bringing about social change, and that more artists and institutions need to invest in doing so. Art can be a great way to start uncomfortable conversations. It can be an extremely gentle, entertaining, empathetic way of learning about the experiences of a person or an issue.

So, I want to conclude on a positive and hopeful note by talking about the impact art has had on me over the years through some examples.

The film Call Me by Your Name- helped me get a peek into the life of a young queer boy exploring his sexuality. I bawled my eyes out after watching “Blood Diamond” and ever since I don’t look at “precious stones” the same way. One of my favorite films is “Jaane Bhi Do Yaaron” that made me laugh but also has a deeper appreciation for the importance of media and journalism in a democratic country like ours. A play I saw in Manal Magudi, on the depiction of Surpanakha’s side of the incident described in Ramayana – made me question the other side of a story no matter how old or how popular it is. Watching old videos of plays written and produced by Habib Tanvir brought to light how religion is and continues to be used as a tool for dividing & distracting us.

And today as I submit this, I’m grateful for all the visual artists, poets, writers, photographers and film-makers from Palestine who have continued to fearlessly and tirelessly make art for decades, documenting with great detail and finesse so that the world recognises the pain and suffering of their people. The world is watching. It is listening. And I hope that it will finally start changing.




About the Winning Author - Gayatri Nair, based is an arts manager and educator. Although she began her career in financial technology after being trained in computer engineering, Gayatri made a transition to become a family and portrait photographer, as well as a vocal advocate and educator for the arts. As one of the co-founders of the Chennai Photo Biennale Foundation, a non-profit arts organization, she spearheads CPB Prism, the foundation's educational division. Gayatri is committed to promoting the integration of arts-based learning in education, which she achieves through developing curricula, training teachers, publishing children's literature, and organizing hands-on workshops. As a leader at the foundation, she also manages fellowships and grants to empower womxn artists.

Gayatri's passion for gender equity in the arts industry led her to establish The Kala Collective. This community brings together female-identifying artists, providing them with opportunities to collaborate, learn, receive mentorship, and build a supportive network.


 

கலை ஓர்‌ சமூக மாற்றத்தின்‌ கருவி.

ந.கவிஷானி


கலை, தர்ம சாஸ்திரம்‌ கற்பிக்க வரவில்லை; ஒழுக்க நூலை இயற்ற வரவில்லை; உடற்கூறு

நூலை எடூத்துக்‌ காட்ட வரவில்லை; பத்து தலை இராவணனும்‌, ஆறுதலை சுப்பிரமணியனும்‌,

உடற்கூறு நூலுக்கு புறம்பான அபத்தமாக இருக்கலாம்‌. ஆனால்‌ ஒரு கொள்கையை,

இலட்சியத்தை உணர்த்த கூடியது, அது தான்‌ கலையின்‌ இலட்சியம்‌ என புதுமைபித்தன்‌ தன்‌

எண்ணக்கருவினை விதைத்துள்ளார்‌. கலையானது தனக்கென முத்திரையை பதித்து வைத்துள்ளது

என கூறுவதில்‌ ஐயமில்லை. மனிதனை ஏனைய உயிரங்கிகளிடமிருந்து தனித்து காட்டூவதற்கு

அடிப்படையாக கலை அமைய பெறுகிறது எனலாம்‌. இதனடிப்படையில்‌ மனிதனின்‌ எல்லா

உணர்ச்சிகளிலும்‌ கலை சங்கமிக்கின்றது என்ற கோட்பாட்டை நாம்‌ கருத்திற்‌ கொள்ள வேண்டும்‌.

ஆதிகால மனிதனானவன்‌ எவ்வித நாகரிக வளர்ச்சிகளுமின்றி தன்னை சமூகத்தின்‌ பாதையில்‌

இட்டூச்செல்வதற்கு கலையினை ஓர்‌ ஆயுதமாக பயன்படூத்திக்‌ கொண்டான்‌. கலையானது தனது

ஆதிக்கத்தினை பல்வேறு இடங்களில்‌ நிலை நிறுத்தி வருகின்றதோடு, மானிட பண்பாட்டோடும்‌

கலந்து செயலாற்றுகிறது. இனம்‌, மதம்‌, மொழி தெரியாத ஆரம்பகால மனிதனானவன்‌

ஒருவருக்கொருவர்‌ தொடர்புகளை பேணுவதற்கு கலையினை ஊடகமாகக்‌ பயன்படுத்தினான்‌.

கலைகள்‌ பொதுவாக மூன்று வகைகளாக வகைப்படூத்தப்படூகின்றன. அவையாவன

கட்புலக்கலைகள்‌, அரங்காடல்‌ கலைகள்‌, எழுத்துக்கலைகள்‌ என்பனவாகும்‌. தற்காலத்தில்‌

கலைகள்‌ நுண்கலைகள்‌, பயன்பட கலைகள்‌ என்ற பெரும்‌ இரண்டு பிரிவுகளாக

வகுக்கப்படுகின்றன. இதனடிப்படையில்‌ மனிதனின்‌ ஆக்கத்திறனின்‌ வெளிப்பாடே கலை என்ற

வரையறையை கொள்ள முடியும்‌.

கட்புலக்கலைகளில்‌ ஒவியம்‌, சிற்பம்‌, ஒளிப்படம்‌ ஆகிய கலைகளும்‌, அரங்காடல்‌ கலைகளில்‌

இசை, நடனம்‌, நாடகம்‌, சொற்பொழிவு, தற்காப்புக்கலைகளும்‌, எழுத்துக்‌ கலைகளில்‌ கதை,

கவிதை, கட்டுரை, நாடகவியல்‌ ஆகிய கலைகளும்‌ அடங்கப்படுகின்றன. இவ்வாறான கலைகள்‌

சமூகத்தில்‌ நிலைநாட்டம்‌ பெறுவதனால்‌ தான்‌ சமூக விழுமியப்பண்புகள்‌ மேம்படுத்தப்படுகின்றன.

இனி கலையானது சமூக மாற்றத்தின்‌ கருவியாக எவ்வாறெல்லாம்‌ செயற்படுகின்றன என்பதனை

பற்றி விரிவாக நோக்குவோம்‌.

முதலாவதாக கலாசார தாக்கத்தினை பார்த்தோமானால்‌ கலையானது ஒவ்வொரு தனித்துவத்தினை

கொண்டு ஒவ்வொரு ஆற்றுகையாளனாலும்‌ படைப்பாக்கம்‌ செய்யும்‌ பொழுது அவை பேரளவில்‌

வரவேற்கப்படுகின்றன. இதனால்‌ சமூக ஆர்வளர்களின்‌ எண்ணிக்கை பல மடங்கு

உயர்ந்துக்கொண்டே செல்கின்றன. பிரதேசத்திற்கு பிரதேசம்‌ கலைப்பாரம்பரியமானது

வேறுப்படுகின்றது. அப்படைப்பு கலைகளை மேடையேற்றுவதனால்‌ அனைவருக்கும்‌ அப்பிரதேச

கலைப்பண்பாடூ பற்றிய தெளிவு கிடைக்கப்பெறுகின்றன. உதாரணமாக தென்னிந்திய பரதநாட்டிய

கலைஞர்‌ ஒருவர்‌ தன்‌ ஆற்றுகையை அரங்கேற்றும்‌ போது அக்கலையின்‌ தனித்துவத்தன்மை

வெளிப்படுத்தப்படுகிறது. இதனால்‌ ஆற்றுகையாளனுக்கும்‌, பார்வையாளர்களுக்கும்‌ இடையிலான

பரஸ்பரம்‌ அதிகரிப்பதோடு சமூக நல்லிணக்கம்‌ கிடைக்கப்பெறுகின்றன. மேலும்‌ அக்கலைப்பற்றிய

அனைத்து தகவல்களும்‌ பரவலாக்கப்பட்டு அனைவர்‌ மத்தியிலும்‌ பேசப்படுகின்றன. அத்தோடு

அக்கலையின்‌ வரலாறு, பாரம்பரிய நடைமுறை வழக்காறுகள்‌ பற்றிய விடயங்களும்‌

தெரியவருகின்றன. இதனால்‌ கலை வரலாற்றில்‌ கலாசாரமானது பல்வேறு தாக்கங்களை

உண்டாக்கி பல சமூக மாற்றங்களை ஏற்படூத்துகின்றன என்ற கருத்தினை முன்வைக்கலாம்‌.

அடூத்ததாக கலையினால்‌ அரசியல்‌ மாற்றங்களும்‌ உண்டாக்கப்படூகின்றன. 20ம்‌ நூற்றாண்டில்‌

ஏற்பட்ட உலக போரின்‌ விளைவாக பல பாதகங்கள்‌ ஏற்பட்டிருந்தாலும, சில முக்கிய சாதகங்களும்‌

ஏற்பட்டன. அதாவது பல ஒவியக்கலைஞர்களின்‌ ஒவியங்கள்‌ படைக்கப்பட்டு அவை சமூக

மாற்றங்களை உண்டாக்கின. உதாரணமாக பிகாசோ, லியானோடா டாவின்சி, டாலி, எட்வர்ட்‌ மண்ச்‌

போன்ற பல ஓவியர்கள்‌ தாங்கள்‌ எண்ணும்‌ உணர்வுகளை ஓவியங்களாக, சிற்பங்களாக

படைப்பாக்கம்‌ செய்து காட்சிப்படுத்தினர்‌. மேலும்‌ போர்‌ காலத்தில்‌ மக்கள்‌ பட்ட இன்னல்களை

பிரதிபலிக்கும்‌ வகையில்‌ பல படைப்புகள்‌ வெளிவந்தன. இதிலிருந்து சமூக மாற்றங்களை

பிரதிபலிக்கும்‌ கண்ணாடியாக கலையானது திகழ்கின்றதென்ற நிதர்சனத்தை அறியமுடிகிறது.

சமூகத்தில்‌ பொருளாதார மாற்றங்கள்‌ தாக்கம்‌ செலுத்துவதற்கு கலை அடிப்படையாக அமைகிறது.

குறிப்பாக ஆற்றுகை கலைஞர்கள்‌, (இயல்‌, இசை, நாடகம்‌) சிற்ப, ஓவிய கலைஞர்களால்‌

படைக்கப்பட்ட படைப்பாக்கங்களைக்‌ கொண்டு உலகளவில்‌ வணிகம்‌ மேற்கொள்ளப்படூகின்றன.

அதாவது தஞ்சை பெருவுடையார்‌ கோவிலில்‌ இருக்கின்ற சிற்பங்களை பார்வையிட, ஆராய்ச்சி

மேற்கொள்ள வருகின்ற சுற்றுலாப்பயணிகளின்‌ எண்ணிக்கை எண்ணில்‌ அடங்காதவை. இதனால்‌

நாட்டின்‌ அந்நிய செலவாணியின்‌ எழுச்சி வீதம்‌ அதிகரிக்கப்படூகிறது. அதுமட்டூமின்றி தத்ரூப

சிற்பங்களை வடித்து அவற்றினை ஏற்றுமதியும்‌ செய்கின்றனர்‌. இதனால்‌ நாட்டின்‌ பொருளாதார

மாற்றத்திற்கு கலையானது ஊண்டுகோலாக உள்ளது எனலாம்‌.

தற்காலத்தில்‌ கலைகளை சமூகத்தினரிடம்‌ கொண்டுச்‌ செல்வதற்கு சமூக வலைத்தளங்கள்‌

பேரளவில்‌ ஊடகமாக செயற்படுகின்றன. அதாவது முகநூல்‌, படவரி, வலையொளி, கீச்சகம்‌,

தொலைவரி போன்ற ஊடகங்களில்‌ கலைகளின்‌ தாக்கங்கள்‌ அனைவரிடத்திலும்‌ பரிமாறப்பட்டு

அக்கலை தொடர்பான நேர்‌, மறை கருத்துக்களும்‌ வெளிக்கொணரப்படுகின்றன. இவ்வாறு கலைஞன்‌

ஒருவன்‌ தனது அரங்காற்றுகையின்‌ போது கிடைக்கப்பெற்ற அனுபவங்களை, திறமைகளை

வெளிக்காட்டுவதற்கு கிடைத்த அரும்பெரும்‌ மேடையாக இச்‌ சமூக வலைத்தளங்கள்‌

கையாளப்படுகின்றன. இதனால்‌ மக்களிடையே கலையானது நிலைநிற்கின்றது. மேலும்‌ மக்களின்‌

பொழுதுபோக்கினை இக்கலைகள்‌ சுவாரஸ்யப்படூத்துகின்றன எனலாம்‌.

அடூத்ததாக சமூதாய எண்ணக்கருக்களை மையமாக வைத்து நாடகங்களானது குறு நாடகங்கள்‌,

தெரு நாடகங்கள்‌, வீதி நாடகங்களாக படைக்கப்படூகின்றன. இதில்‌ பல கதாபாத்திரங்களின்‌

வாயிலாக சமூக கருத்துக்கள்‌ உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக

உலகநாயகன்‌ கமலஹாசன்‌ நடிப்பில்‌ வெளிவந்த “அன்பே சிவம்‌” எனும்‌ திரைப்படமானது

யதார்த்தத்தை இயல்பாக கூறும்‌ வகையில்‌ அமையப்பெற்றிருக்கும்‌. மேலும்‌ நாடகங்களில்‌

பெண்ணியல்‌ சமத்துவம்‌, சிறுவர்‌ துஷ்பிரயோகம்‌, இன, மத பிரச்சினைகள்‌, பெண்ணடிமை

போன்றவற்றை விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ வகையிலும்‌ படைக்கப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு கலைகளும்‌ ஆற்றுகைப்படூத்தப்படுவதனால்‌ அக்கலைஞனுக்கான அங்கீகாரம்‌

சமூகத்தில்‌ நிலை நிறுத்தப்படுகின்றது. ஆதலால்‌ அக்கலைஞன்‌ தன்‌ கலையை அனைவரிடத்திலும்‌

கொண்டுச்‌ செல்வதற்காக பல்வேறு அர்ப்பணிப்புக்களை மேற்கொள்வதோடு தன்‌ திறமையினால்‌

அனைவரையும்‌ கவர்ந்து தனக்கென முத்திரையை பதித்துக்‌ கொள்ள முற்படுகின்றான்‌. அந்த

வகையில்‌ கலைகளை சரியான முறையில்‌ வளர்ச்சிப்பாதைக்கு கொண்டுச்‌ சென்ற அரிய

மகான்களில்‌ எம்‌.எஸ்‌.சுப்புலக்ஷ்மி, சிவாஜி கணேஷன்‌, ரவிந்திரநாத்‌ தாகூர்‌, மைக்கல்‌ ஏஞ்சலோ,

ஆர்‌.கே.நாராயண்‌, கண்ணதாசன்‌, நிகாத்‌ சவுத்ரி போன்றோர்‌ ஆவர்‌.

கச்சேரிகள்‌, விழாக்கள்‌, வைபவங்கள்‌, கண்காட்சிகள்‌ ஆகியவை இடம்பெறுதனால்‌ பல்கலை

கலாசார விழுமியங்கள்‌ பகிரப்படூவதோடுூ ஏனைய கலைசார்‌ அறிவினையும்‌ அறிந்துக்‌ கொள்ளகூடிய

வாய்ப்பு கிடைக்கின்றன. உதாரணமாக மேலைத்தேய இசைக்‌ கச்சேரிகள்‌ நமது பிரதேசங்களில்‌

நிகழும்‌ போது அக்கலையின்‌ சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. அதுமட்டூமின்றி

அக்கலைசார்‌ மக்களோடு நாமும்‌ இணைந்து பணியாற்றும்‌ வாய்ப்பு கிடைக்கப்படுவதோடு

புதுமையான படைப்புகள்‌ வெளிவரப்படூகின்றன. இதற்கு சிறந்த உதாரணமாக டாக்டர்‌. எல்‌.

சுப்பிரமணியம்‌ அவர்கள்‌ தனது வயலின்‌ வாசிப்பினால்‌ அனைவரையும்‌ தன்‌ வசமாக்கியவரே! இவர்‌

மேலைநாட்டு இசைக்குழுவுடன்‌ கச்சேரிகளை படைப்பதனை பார்க்கும்‌ பொழுது கலையானது

பரஸ்பர உறவினை வளர்ப்பதற்கு காரணமாக இருக்கிறது என கூறலாம்‌.

மனிதனின்‌ உணர்வுகளை வெளிக்கொண்டு வருவதற்கு கலைகள்‌ பெரிதும்‌ உதவுகின்றன. அந்த

வகையில்‌ இசைக்கு மயங்காதோர்‌ எவருமில்லை என்ற கூற்றுக்கிணங்க ஒரு குழந்தை இப்பூமியில்‌

அவதரித்து மேன்மையடைந்து இறக்கும்‌ வரை இசையானது வியாபித்துள்ளது. (தாலாட்டூ முதல்‌

ஒப்பாரி வரை) இதற்கு உதாரணமாக ஒரு கதையினை முன்வைக்கலாம்‌ என நினைக்கின்றேன்‌.

மேலை நாட்டில்‌ ஒரு கர்ப்பிணித்தாய்‌ தான்‌ கர்ப்பமாக இருந்த காலத்தில்‌ இசைஞானி

இளையராஜாவின்‌ ஷிம்பொனியிலமைந்த திருவாசகத்தை கேட்டு வந்துள்ளார்‌. அதன்போது

வயிற்றிலிருந்த குழந்தையின்‌ அசைவு அதிகமாக இருப்பதனை அத்தாய்‌ உணர்ந்து வந்தார்‌. பிரசவ

நாளும்‌ வந்தது; தாய்க்கோ பேரானந்தம்‌ தன்‌ குழந்தையை வாரி அனைக்க வேண்டுமென்று;

ஆனால்‌ குழந்தை பிறந்ததிலிருந்து எவ்வித பேச்சுமின்றி, அசைவுமின்றி காணப்பட்டது;

கவலைப்பட்ட பெற்றோர்‌ செய்வதறியாமல்‌ தவித்தனர்‌; காலங்களும்‌ உருண்டோடின; அவர்கள்‌

எதேச்சையாக இளையராஜா அவர்களின்‌ அவ்‌ ஷிம்பொனி இசையை ஒலிக்கச்‌ செய்ய அக்குழந்தை

பேசத்‌ தொடங்கியது. சற்றும்‌ எதிர்ப்பாக்காத பெற்றோர்‌ தன்‌ குழந்தையை இளையராஜா அவர்களின்‌

வீட்டிற்கு அழைத்து ஆசி பெற்று அவரால்‌ அக்குழந்தைக்கு பெயரும்‌ சூட்டப்பட்டது. இதிலிருந்து

தெரிய வருவது யாதெனில்‌ இசை எவரையும்‌ வசியப்படுத்தி விடும்‌ என்பதேயாகும்‌. தற்காலத்தில்‌

நோய்களுக்கு தீரவாக இசையை உபயோகப்படுத்தி வருகின்றனர்‌. இசை தெரபி என்ற

செயன்முறையை உபயோகித்து ஆஸ்துமா, தலைவலி, மனச்சோர்வு, இருதய நோய்‌, மனவழுத்தம்‌

போன்ற பல நோய்களுக்கு குறிப்பிட்ட இராகங்களை கையாண்டூ குணப்படுத்துகின்றனர்‌. இவ்வாறு

கலையானது நோயற்ற சமூகத்தினை உருவாக்க பெருமளவில்‌ பயன்படூத்தப்பட்டு வருகின்றது.

நாகரிகங்கள்‌ வளர்ச்சிப்பெற நவீனக்கலைகள்‌ புத்துணர்வு பெறுவதோடு, பாரம்பரியக்கலைகள்‌

வீழ்ச்சிப்பாதைக்குச்‌ செல்கின்றன. இந்நடைமுறையினால்‌ பாரம்பரிய கலைகள்‌ முற்று முழுதாக

பாதிக்கப்பட்டு அக்கலைஞர்கள்‌ பெருமளவில்‌ பாதிக்கப்படூகின்றனர்‌. எனவே அவர்களுக்கான

அங்கீகாரத்தினையும்‌, வாய்ப்புக்களையும்‌ வழங்கி கெளரவிப்பது நமது தலையாய கடமையாகும்‌.

சமூக வளைத்தளங்களில்‌ சாதகமான விளைவுகள்‌ கிடைக்கப்பெற்றாலும்‌, சமூக சீர்கேடுகளை

ஏற்படுத்தும்‌ வகையில்‌ கலைகளை பயன்படுத்துவதனை தவிர்த்து கலையின்‌ உன்னதங்களை

பிரதிபலிக்கும்‌ வகையில்‌ விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும்‌. அத்தோடு தவறான

முறையில்‌ கலைகளை பயன்படூத்துவோருக்கு உரிய தண்டனைகளை வழங்க சட்டங்கள்‌

அமுலாக்கப்பட வேண்டும்‌.

சிற்பக்கலைகள்‌, ஓவியக்கலைகள்‌ என்பவற்றை தவறான முறையில்‌ பயன்படுத்துகின்றனர்‌. அதற்கு

சிறந்த உதாரணமாக சிலைக்கடத்தலை கூறலாம்‌. அதாவது தங்கச்சிலைகளை வடிவமைக்கும்‌

போது அவை முழுவதுமாக தங்கத்தால்‌ அமைக்கப்படாமல்‌ போலியாக வடிவமைக்கப்படுகிறது.

அது மட்டுமின்றி சிலைகள்‌ வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக கடத்தப்படுகின்றன. இவை நாட்டின்‌

அரசியல, சமூக, கலாசார மாற்றங்களுக்கு இடையூறாக அமைகின்றன. இவற்றினை கவனத்திற்‌

கொண்டு இக்கலைக்கான அங்கீகாரத்தை வழங்குவதோடு அரசானது இக்கலைஞர்களுக்கான

ஊக்குவிப்புக்களை அளிப்பது சாலச்சிறந்தது.

கலையானது தொழில்நுட்பத்தோடூ இணையும்‌ போது புத்துணர்வு பெற்ற புதுமைப்படைப்புகள்‌

கிடைக்கப்பெற்றாலும்‌ மறுபக்கம்‌ சில பாதகங்களை சம்பாரிக்கின்றன. குறிப்பாக கூற

வேண்டுமென்றால்‌ பாரம்பரிய கூத்துக்கள்‌ நலிவடைந்து அவை பின்தள்ளப்படுவதோடூ

இக்கூத்துக்கள்‌ பற்றிய வரலாறுகளும்‌ நலிவடைகின்றன. ஆதலால்‌ இக்கூத்து இசைகலைஞர்கள்‌

தங்களுடைய பாரம்பரிய கலைகலை கைவிட நேருகின்றனர்‌. இப்பிரச்சினைக்கான தீர்வுகளை

தற்காலத்தில்‌ அரசியல்‌ தலையிட்டு பல்வேறு நிகழ்வுக்கான களத்தை அமைத்துக்‌ கொடுப்பதோடு

அக்கலைஞர்களுக்கான கெளரவிப்புகளும்‌ வழங்கப்படுகின்றன. (உதாரணம்‌ :- சென்னை சங்கமம்‌).

கலையென்பது மனிதனாக பிறந்த ஒவ்வொருவனும்‌ அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தமடா

என எம்‌.ஆர்‌. இராதா அவர்களின்‌ கருத்துக்கிணங்க அனைவருக்கும்‌ கலையின்‌ உன்னதமானது

தெரிய வருதல்‌ அவசியம்‌. எப்படிப்பட்ட கலையும்‌ ஒழுக்கக்குறைவுக்கும்‌ மூட நம்பிக்கைக்கும்‌

சிறிதும்‌ பயன்படக்கூடாததாய்‌ இருத்தல்‌ அவசியம்‌. இவ்வாறு கலையின்‌ அருமையினை

அனைவரிடத்திற்கும்‌. கொண்டு செல்வது சமூக மறுமலர்ச்சிக்கு ஏதுவான காரணியாக

அமையப்பெறுகிறது. எனவே சமூக மாற்றத்தின்‌ கருவியாக கலையானது தனக்கென இடத்தினை

வகிக்கின்றது. ஆகவே இளம்‌ சமூதாயத்தினருக்கு கூறுவது என்னவெனில்‌ கலைகளை மதித்து

அவற்றை அதற்கேற்றாற்போல்‌ கொண்டுச்‌ சென்று, பெருமையடையச்‌ செய்வதனால்‌ சமூகம்‌

நல்லெழுச்சி பெறும்‌ என்ற நிதர்சனத்தை ஆணித்தரமாக கூறிக்‌ கொள்ளலாம்‌. ஆகவே, இனியாவது

கலைப்பால்‌ எம்மை அர்ப்பணித்து ஆன்மீக அழகினை பெறுவோமாக.

நன்றி!


About the Winning Author - Kavishani N is a perfoming artist and hails from Sri Lank. She has completed Bachelors in Music at Swamy Vipulananda Institute of Aesthetic Studies in Eastern University, Batticaloa. Currently she is pursuing Masters in Carnatic Violin at Tamil Nadu Dr. J. Jayalalitha Music and Fine Arts University.

279 views0 comments

Recent Posts

See All
bottom of page